Thiruvannamalai Deepam

Thiruvannamalai deepam
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். நவம்பர் 19ஆம் தேதியன்று மலைமீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும்.
எந்த நேரத்தில் மலையில் தீபம் ஏற்றப்படும்?
தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை எப்போது?
கார்த்திகை மாதப் பௌர்ணமி திதி தினத்திலும் கார்த்திகை நட்சத்திர தினத்திலும் இந்த விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பௌர்ணமியை அடிப்படையாகக் கொண்டு சர்வாலய தீபம் கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இந்த நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
திருக்கார்த்திகை என்றால் என்ன?
கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும்?
வேதத்தின்படி விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும், தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல.
கார்த்திகை தீபம் அன்று என்ன செய்ய வேண்டும்?
கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.
எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?
விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும், தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல. இறந்தவர்களுக்கு கர்மா செய்யும்போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும்தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
வீட்டில் எந்த விளக்கு ஏற்றினால் நல்லது?
பொதுவாக பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும். அவை ஒரே மாதிரியான விளக்காக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பூஜையறையில் தினமும் காலை, மாலை இரு வேளையும் தவறாது எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
விளக்கு ஏற்றினால் என்ன பலன்?
விளக்கு ஏற்றும் திசை பலன்கள்: கிழக்கு திசை நோக்கு விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும். வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?
வேப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் குலதெய்வம் அருள் கிடைக்கும். நெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களை கலந்து அதைப் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் மற்ற எண்ணெய்கள் ஊற்றி தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலனை விட மிக சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும்.









Post a Comment for "Thiruvannamalai Deepam"